கோடக் மகிந்திரா வங்கியின் வளர்ச்சிக்கு உதவும் "811"

வங்கியின் வளர்ச்சிக்கு உதவும் கோடக் மகிந்திரா வங்கியின், 811 என்னும் வித்யாசமான எண் கைபேசி மூலம் முழுமையான சேவையை வழங்கும் டிஜிட்டல் வங்கியியல் திட்டமாகும். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குச் சிந்தனையில் உதித்த டிஜிட்டல் நியூ இந்தியாவின் 811 வாடிக்கையாளர் பயன்பாட்டிற்கு எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கும், ஜீரோ கட்டணங்களுடன் ஜீரோ கையிருப்பு சேமிப்புக் கணக்கை 811 வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்குக் கையிருப்புத் தொகையின் மீது ஆண்டுக்கு 6 சதவிகிதம் வட்டி பெறலாம். 811 மூலம் கோடக் தனது வளர்ச்சித் திட்டத்தை மேம்படுத்தி நிறைவான சேவைகளை வழங்கும். 



இந்தியா முழுவதும் சுமார் 700 இடங்களில் முழுமையான டிஜிட்டல் மற்றும் காகிதமில்லா கணக்கைத் துவங்கும் அனுபவத்தை 811 வழங்குகிறது. இந்தியாவின் முன்னணி வங்கியியல் செயலியான கோடக் கைபேசி வங்கியியல் செயலி மூலம் 5 நிமிடங்களில் எங்கிருந்தும், எந்நேரமும் கணக்கைத் துவங்கலாம். கைபேசி மூலம் கணக்கைத் துவங்க ஆதார் அடிப்படையிலான ஓடிபி சான்றளிக்கப்பட்ட செய்முறையை முதன் முதலில் கோடக் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. 811 துவங்கவும், இயக்கவும், ஆதார் மற்றும் பான் எண்கள் மட்டுமே போதும்.

கூகிள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் செயலி ஸ்டோர் ஆகிய இரண்டிலும் இப்போது 811 கிடைக்கும். கோடக் கைபேசி வங்கியியல் செயலிக்கு **811 மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலம் உடனடியாகக் கைபேசியில் இதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



இதுகுறித்து கோடக் மகிந்திரா வங்கி முதன்மை டிஜிட்டல் அதிகாரி தீபக் சர்மா கூறுகையில், கைபேசியில் மிகச் சிறந்த வங்கியியல் அனுபவத்தை வழங்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் 811 வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து டிஜிட்டல் பரிமாற்றங்களும், ஜீரோ கட்டணங்களுடன் கூடிய ஜீரோ பேலன்ஸ் கணக்கை வழங்கும் முழுமையான சேவை ஆகும். சேமிப்புக் கணக்கு கையிருப்பின் மீது 6 சதவிகிதம் வட்டியையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்" என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...